Skip to content
Home » சத்தமா பட்டாசு வெடிக்காதே….. கண்டித்த அண்ணியை கொன்ற கல்லூரி மாணவன்…

சத்தமா பட்டாசு வெடிக்காதே….. கண்டித்த அண்ணியை கொன்ற கல்லூரி மாணவன்…

திருவள்ளூர் மாவட்டம் கன்னிகை பேர் கிராமத்தை சேர்ந்தவர் 52 வயதான சக்திவேல். இவர் எல்லாபுரம் பகுதி திமுக ஒன்றிய கழக செயலாளராக உள்ளார். இவரது மகன்  விஷால்(20). இவர் தனியார் கல்லூரியில் பொறியியல் இறுதி ஆண்டு படித்துவருகின்றார். விஷால் புத்தாண்டு அன்று இரவு தனது தெருவில் நண்பர்களுடன் கேக் வெட்டி பட்டாசு வெடித்து புத்தாண்டை கொண்டாடினார். 10க்கும் மேற்பட்ட நண்பர்கள் மதுபோதையில் கூச்சலிட்டு புத்தாண்டை கொண்டாடி உள்ளனர். இரவு நீண்ட நேரம் ஆகியும் மதுபோதையில் வாலிபர்கள் கூச்சலிட்டு சத்தம் போட்டுள்ளனர்.

இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் விஷாலின் பெரியப்பா மகன் முருகன் மற்றும் அவரது மனைவி ரம்யா மற்றும் பெரியம்மா செல்வி ஆகியோர் விஷாலை கண்டித்துள்ளனர். ஏற்கனவே2 குடும்பத்திற்கும் சொத்து தகராறு இருந்துள்ளது.  இந்நிலையில் மது போதையில் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து முருகன், ரம்யா மற்றும் தனது பெரியம்மா செல்வி ஆகியோரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார் விஷால்.  கண் இமைக்கும் நொடியில்  தலையில் படுகாயமடைந்த ரம்யா சம்பவ இடத்திலையே ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த விஷால் உடனே அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் முருகனும் செல்வியும் படுகாயமடைந்தனர். அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கதினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு வந்த பெரியபாளையம் போலீசார் உமலை கைபற்றி தப்பியோடிய விஷாலை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *