பழம்பெரும் தமிழ் நடிகை வஹிதா ரெஹ்மானுக்கு, தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. வஹிதா, எம்.ஜி.ஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் நடித்தவர். விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் கமலின் தாயாக நடித்திருந்தார்.
இவருக்கு தற்போது 85 வயது ஆகிறது. தெலுங்கு, இந்தி உள்பட ஏராளமான படங்களில் நடித்து உள்ளார். தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் பிறந்தவர். தற்போது மும்பையில் குடியிருக்கிறார். காதல் திருமணம் செய்து கொண்டவர். இவரது கணவர் 2000ல் காலமாகி விட்டார்.
பிலிம்பேர் விருது உள்பட பல விருதுகளை வென்றவர். சினிமாத்துறையில் தாதாசாகேப் பால்கே விருது என்பது மிக உயரிய விருதாக கருதப்படுகிறது. சினிமாத்துறைக்கு வாழ்நாள் சாதனை செய்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சிவாஜி, பாலசந்தர், ரஜினி , மற்றும் லதா மங்கேஷ்கர், அமிதாப்பச்சன் ஆகியோர் பெற்றுள்ளனர்.