Skip to content
Home » முடியை ஒழுங்கா வெட்டிட்டு வா… ஆசிரியர் கண்டித்ததால்…புதுகை மாணவன் தற்கொலை

முடியை ஒழுங்கா வெட்டிட்டு வா… ஆசிரியர் கண்டித்ததால்…புதுகை மாணவன் தற்கொலை

  • by Senthil

புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள அரசு முன்மாதிரி பள்ளியில் பிளஸ்2 படித்து வந்த  மாணவன்,  தலைமுடியை  அலங்காரம் செய்து  வெட்டி இருந்தார். இதைப்பார்த்த  தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம், ஆசிரியர் பாரதி ஆகியோர் சம்பந்தப்பட்ட மாணவனை அழைத்து,  இப்படி முடி அலங்காரம் செய்து பள்ளிக்கு வரக்கூடாது. சரியாக முடியை வெட்டிவிட்டு வா என  வகுப்பை விட்டு வெளியேற்றி விட்டனர்.

இந்த சம்பவம் நேற்று  மதியம் நடந்தது. வகுப்பறையில் இருந்து வெளியே வந்த மாணவன், அருகில் உள்ள ஒரு தைலமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான்.  இது குறித்து

கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் சிவப்பிரகாசம்,  ஆசிரியர் பாரதி ஆகியோரை முதன்மை கல்வி அதிகாரி மஞ்சுளா சஸ்பெண்ட் செய்தார்.

தற்கொலை செய்து கொண்ட மாணவன் பெயர் மாதேஸ்வரன்,  புதுக்கோட்டை அருகே உள்ள  ராஜாப்பட்டியை சேர்ந்த கண்ணையா என்பவரது மகன்.  மாணவன் மாதேஸ்வரன் இப்படி  அலங்காரமாக முடி வெட்டியிருப்பதை ஆசிரியா்கள் ஏற்கனவே அவனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர். ஆனாலும் மாணவன் கேட்கவில்லை.  இந்த நிலையில் நேற்று ஆசிரியர் கண்டித்த உடன் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஆசிரியர்  நல்லதைத்தான் மாணவர்களுக்கு கூறி உள்ளார். இதற்காக ஒரு மாணவன் தற்கொலை செய்தால், அதற்கு ஆசிரியர்களை  சஸ்பெண்ட் செய்வது ஏற்புடையதல்ல., உடனடியாக அந்த உத்தரவை வாபஸ் வாங்க வேண்டும்என  பெற்றோர்கள் பலர் கூறி உள்ளனர். இப்படியே போனால் பள்ளிக்கூடம் சீரழிந்து விடும். எனவே ஆசிரியர்கள் நல்லதை தான் செய்தார்கள் என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்து தமிழகம் முழுவதும்  எழும்பி உள்ளது.்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!