பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து கடந்த 19 ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டமும் நடந்தது. இதில் வழக்கமாக வழங்கப்படும் இலவச வேட்டி, சேலையின் நிறத்திலும் டிசைனிலும் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதில் ரொக்கமாக வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாயுடன் 1 கிலோ அரிசி, சர்க்கரை உடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதாக அறிவித்தது. இது கரும்பு இடம்பெறாததால் கரும்பு விவசாயிகள் போர்க்கொடி தூக்கினர் எதிர்க்கட்சிகளும் பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு வழங்க வேண்டும் என போராட்டங்கள் அறிவித்த நிலையில் அதிரடி உத்தரவாக முதல்வர் பொங்கல் பரிசு தொப்புடன் ஒரு முழு கரும்பும் வழங்கப்படும் என அறிவித்தார். இதனால் கரும்பு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களுக்காக வீடுகள் தோறும் டோக்கன்கள் விநியோகம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எடுத்து தஞ்சை மாவட்டம் முழுவதும் இப்பணிகளை ரேஷன் கடை ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் பொதுமக்கள் ரேஷன் கடையில் கூட்டமாக கூடுவதை தடுக்கும் பொருட்டு வீடு வீடாகச் சென்று டோக்கன் கொடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.