இறக்கும் முன் உடல் உறுப்பு தானம் செய்வோரின் இறுதிச்சடங்குகள் அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் வடிவேலு(37) கடந்த 23ம் தேதி நடந்த சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்தார். ஏற்கனவே அவர் உடல் உறுப்பு தானம் செய்வதாக கூறி இருந்தார்.
இந்த நிலையில் மூளைச்சாவு அடைந்த வடிவேலுவின் கண்கண், தோல், சிறுநீரகங்கள், கல்லீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டது. முதல்வர் அறிவிப்பின்படி வடிவேலு உடலுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தேனி மாவட்ட கலெக்டர், எஸ்.பி. மற்றும் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து அரசு சார்பில் அஞ்சலி செலுத்தினர்.இதற்காக அமைச்சர் மாசு சென்னையில் இருந்து சின்னமனூர் வந்திருந்தார். வடிவேலுவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர் மாசு , பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.