கரூர் மாவட்டம் தாந்தோணி மலை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு முடிவின்படி ஐந்தாம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் கால்நடை ஆய்வாளர் பயிற்சி போர்க்கால அடிப்படையில் துவக்கி கால்நடை பராமரிப்பு துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஆறாவது ஊதிய குழுவில் கால்நடை ஆய்வாளர் நிலை ஒன்று மற்றும் முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்படாத நியமன உதயத்தை பெற்றிட சென்னை உச்சநீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கின் தீர்ப்பினை சங்க கோரிக்கையின் வழி அமல்படுத்திட வேண்டும், தமிழகத்தில் பணியாற்றுகின்ற அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு ஆட்சிக்கு வரும்போது தெரிவித்த தேர்தல் வாக்குறுதியின் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், கால்நடை ஆய்வாளர் சங்க நீண்ட நாள் கோரிக்கையான முதுநிலை கால்நடை மருத்துவ மேற்பார்வையாளர்களுக்கு அடுத்த கட்ட பதவி உயர்வு வழங்கிட வேண்டும், விடுபட்ட அனைத்து கால்நடை மருந்தகங்களிலும் கால்நடை ஆய்வாளர் பணியிடங்களை நினைப்பிட வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.