திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் கல்லக்குடியில் உள்ள டால்மியா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் திருச்சி தென்னக ரயில்வே சார்பில் டால்மியா சிமென்ட் ஆலை மூலம் திருச்சி முதல் அரியலூர் வரை வந்தே பாரத் ரயிலில் இலவசமாக பயணம் செய்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி 9 வந்தே பாரத் ரெயில்களை நேற்று தொடங்கி வைத்தார். இதையொட்டி நெல்லை-
சென்னை இடையேயான வந்தே பாரத் ரெயிலை வரவேற்று, வழியனுப்பும் நிகழ்ச்சி திருச்சி சந்திப்பு ரெயில் நிலையத்தில் நடைபெற்றது. அந்த ரெயில் நெல்லையில் இருந்து நேற்று மதியம் 12.30 மணிக்குப் புறப்பட்டு திருச்சிக்கு மாலை 5.20 மணிக்கு வந்தடைந்தது. அந்த ரெயிலுக்கு திருச்சி ரெயில்வே அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாணவ-மாணவிகள் இசைக்கருவிகள் முழங்க வந்தே பாரத் ரெயிலை வரவேற்றனர். இந்த ரெயிலில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் நெல்லையில் இருந்து திருச்சி வரை பயணம் செய்தார். பின்னர் திருச்சியில் இருந்து புறப்பட்ட வந்தே பாரத் ரெயிலை கொடியசைத்துத்
தொடங்கி வைத்தார். அந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. மேலும் இந்த ரெயிலில் திருச்சி தென்னக ரயில்வே சார்பில் டால்மியா சிமென்ட் ஆலையின் மூலமர டால்மியா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திருச்சியிலிருந்து அரியலூர் வரை இலவசமாக பயணம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் டால்மியா துணைப் பொது மேலாளர்கள் ரபியுதின்,சுரேஷ்,ரமேஷ்பாபு,ஆசிரியர்கள்,மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்