அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது…. அரியலூர் மாவட்டத்தில் வருகின்ற 01.01.2023 முதல் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணிபுரியும் பணியாளர்களின் வருகையினை முற்பகல் மற்றும் பிற்பகல் நேரங்களில் National Mobile Monitoring System (NMMS) என்கிற Mobile App-ல் மட்டும் பதிவுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. ஆதலால், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின்கீழ் பணிபுரியும் பொதுமக்கள் தங்கள் வருகையினை முற்பகல் மற்றும் பிற்பகல் National Mobile Monitoring System (NMMS) என்கிற Mobile App-ல் தங்கள் வருகைக்கான பதிவினை பதிவு செய்து வேலை வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.