தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளியில் 1985-1987 ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவ மாணவியர் பணி மற்றும் தொழில் நிமித்தம் காரணமாக சென்னை, புதுச்சேரி, மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பல ஊர்களுக்கும். சிங்கப்பூர், துபாய், கனடா, அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளுக்கும் குடி பெயர்ந்து விட்டனர் .
இவர்கள் 36 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த மகிழ்ச்சியான நிகழ்வு தஞ்சையில் நடைபெற்றது. அப்பேதையை மாணவர்கள் தற்போது தொழிலதிபர், பேராசிரியர், ஆசிரியர், வங்கி அதிகாரி, விவசாயி தொலைக்காட்சி செய்தியாளர், ஆடிட்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், கணினி மென்பொருள் வல்லுனர்கள் என பல்வேறு துறைகளில் பணியாற்றியும், சொந்தமாகவும் தொழில் நடத்தியும் வருகின்றனர்.
இந்த முன்னாள் மாணவ, மாணவிகள் 25 பேர் தங்களுக்கு கல்வி அறிவு தந்த ஆசிரியர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டு தாங்கள் படித்த தஞ்சை அரசர் மேல்நிலைப்பள்ளிக்கு வருகை புரிந்து தங்களின் ஆசிரிய, ஆசிரியைகளை கண்டு மகிழ்ந்து பேசினர். மறக்குமா நெஞ்சம் என்ற இந்த நிகழ்ச்சி ஸ்வீட் கடை உரிமையாளர் சுப்பிரமணிய சர்மா தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக அரசர் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பன்னீர்செல்வம், ஓய்வு பெற்ற ஆசிரியர் பிச்சைமாணிக்கம் ஆகிய இருவரும் அழைக்கப்பட்டு மாணவ. மாணவிகள் அவர்களுக்கு சிறப்பு செய்து அவர்களுடன் கலந்துரையாடி பள்ளி கால நினைவுகளில் திளைத்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வை குகன் மற்றும் கமலவண்ணன் ஒருங்கிணைத்திருந்தனர்.