முதலமைச்சராக பதவியேற்ற பின்பும் அடிக்கடி பொதுமக்களை அவர்களது இடத்திலேயே சந்திக்கிறார் முக.ஸ்டாலின். பணிகளுக்கிடையே அமையும் சிறு இடைவெளியில் மக்களின் கருத்துகளை கேட்டறிகிறார். உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஸ்டாலின் அவ்வப்போது சைக்கிளை எடுத்துக் கொண்டு சென்னை
கிழக்கு கடற்கரை சாலையில் ரவுண்டு கிளம்பி விடுவார். அதேபோல் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவும் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் நடை பயிற்சி மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். அப்போது அவருடன் சுகாதார பணியாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் செல்பி மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்துக்கொண்டனர். அவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் உரையாடினார்.