பெரம்பலூரில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் ஆலோசனை மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளின் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் அசோக்குமார் சிறப்புரையாற்றி பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக துளிகள் அறக்கட்டளையின் பொருளாளர் திரு. ஆசைத்தம்பி மாவட்ட செயளாளராக சிவம் அறக்கட்டளையின் நிறுவனர் சிற்றம்பலம் பொருளாளராக துளிகள் அறக்கட்டளையின் நிறுவனர் சூரியக்குமார் தலைவராக டைடு அறக்கட்டளையின் நிறுவனர் இராமலிங்கம் துணைத் தலைவராக கிரீன்லைப் அறக்கட்டளையின் நிறுவனர் ஞானபிரகாஷ் துணை செயலாளராக இமயம் அறக்கட்டளையின் நிறுவனர் சரஸ்வதி பொன்னாடை போர்த்தி அறிமுகம் செய்து வைத்தார். மேலும், பெரம்பலூர் மாவட்ட இந்து சமய அற நிலையத்துறை தலைவர் கலியபெருமாள் சிறப்பு விருந்தினராகவும் மாநில துணை தலைவர்கள் சசிக்குமார், இளங்கோவன் வாழ்த்துறை வழங்கியதுடன் 55 தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டனர். தூண்டு நிறுவனங்கள் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர்.