உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் மாதம் மாத கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக திறக்க மறுக்கிறது, இதனால், மேட்டுரில் தண்ணீர் திறந்து விட்டு 102 நாட்களாயும் கடைமடை வரை தண்ணீர் இதுநாள்வரை செல்லவில்லை, திருச்சி மாவட்டத்தில் கட்டளை வாய்க்கால், மேட்டுகட்டளை வாய்க்கால், அய்யாறு போன்ற பல வாய்கால்களில் தண்ணீர் இதுவரை செல்லவில்லை, இதனால் பயிர்கள் அனைத்தும் காய்கிறது. கர்நாடவில் 30 இலட்சம் ஏக்கரில் நெல், கரும்பு, வாழை செழிப்புடன் சாகுபடி செய்கின்றனர். ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க சொன்னால் மழை பெய்யவில்லை, அணையில் தண்ணீர் இல்லை என்று திட்டவட்டமாக கர்நாடக அறிவிக்கின்றன. கர்நாடகாவில் தமிழக முதலமைச்சர் அவர்களின் உருவ பொம்மையை எரிகின்றனர், கிழிகின்றனர். தமிழகத்தில் கர்நாடகா முதலமைச்சர் உருவ பொம்மையை எரித்தால், கிழித்தால் காவல்துறை விவசாயிகளை தடுத்து வஞ்சிக்கிறது. கர்நாடவில் சராசரி மழை 54 சென்டிமீட்டர், இந்த ஆண்டு கர்நாடகாவில் 50 சென்டிமீட்டர் மழை பெய்து உள்ளதாக மத்திய அரசு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
எனவே, காவிரியில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மாதாமாதம் தர வேண்டிய தண்ணீரை உடனடியாக திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை காவிரியில் இறங்கி போராட்டம் நடத்திய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க அய்யாக்கண்ணு அவர்களின் தலைமையில் விவசாயிகள் திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில், ராஜாங்கம், குமார், சிவகுமார், நவநீதம், விஜயலட்சுமி, உதண்டன், பெரியசாமி, ராஜசேகர், சின்னதுரை, தர்ஸன், குமாரி, வேம்பு, சேகர், ராமர் மற்றும் பலர் திருச்சி அண்ணாசிலை to மாம்பலசாலை வரை உள்ள காவிரி மேம்பாலத்தின் மேல்புறத்தில் காவிரியில் உள்ளிருப்பு போராட்டம் நாணல் தட்டைகளை தீ வைத்து அதன் உள்ளே இறங்கி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.