இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி இந்தூரில் இன்று நடந்தது. முதலில் இந்தியா பேட் செய்தது. துவக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கெய்க்வாட் 8 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ஸ்ரேயஸ் அய்யர், சுப்மன் கில்லுடன் இணைந்து ஆஸ்திரேலிய பந்து வீச்சை விளாசி தள்ளினர். இருவரும் அடுத்தடுத்து சதம் அடித்தனர். 50 ஓவர்களின் முடிவில் இந்தியா 399 ரன்கள் குவித்தது.
ஸ்ரேயஸ் அய்யர் 105, கில் 104, கே.எல்.ராகுல் 52, சூர்யகுமார் யாதவ் 72 ரன்கள் எடுத்தனர். ஆஸி. தரப்பில் கிரீன் 2, ஹேசில்வுட், சாம்பா, அபாட் தலா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து 400 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது.