மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த நீடூரில் உள்ள தனியார் கல்லூரியில் தமிழ்நாடு வனத்துறையின் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் கல்லூரி தோட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில், தேக்கு, மகாகனி, வேங்கை போன்ற மயிலாடுதுறை மாவட்டத்தின் தட்பவெப்ப நிலைக்கும், மண்ணின் தரத்துக்கும் உகந்த மரக்கன்றுகள் நடப்பட்டன. இதனை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மரக்கன்றுகளை நட்டு தொடக்கி வைத்தார். முன்னதாக அனைவரும் மரக்கன்றுகளை வளர்ப்பதன் அவசியம் குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் மற்றும் வனத்துறை அலுவலர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். தொடர்ந்து கல்லூரியில் இருந்து மாணவிகள் பேரணியாக புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகளின் வழியே மரக்கன்றுகள் நடுவதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.