கரூர் மாவட்டத்தில் காவிரி கரை பகுதிகளான வேலாயுதம்பாளையம்,கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கர்களில் வெற்றிலையை அதிக அளவில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.
தற்போது வேலாயுதம்பாளையம் பகுதியில் நாளுக்கு நாள் வெற்றிலை விவசாயம் குறைந்து கொண்டே வருகிறது, குறிப்பாக ஆள் பற்றாக்குறை, வெற்றிலையில் நோய்
தாக்குதல், போதிய தண்ணீர் இன்மை என தொடர்ந்து விவசாயிகள் பல இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் வெற்றிலையின் விலை சற்று சரிவைச் சந்தித்துள்ளது.104 கவுளிகள் கொண்ட ஒரு கட்டு வெற்றிலை ரூ. 7,000-க்கு விற்பனையானது. அதே அடுத்த ரகமானது ஒரு கட்டு 3000 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
தற்ப்போது புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் திருவிழாக்கள், திருமணங்கள் உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகள் இல்லாததால், வெற்றிலை தேவைகள் இல்லாததால், கொள்முதல் செய்யும் இடைத்தரகர்கள் குறைந்த அளவு வெற்றிலையையே வாங்கிச் செல்கின்றனர்.
காவிரி ஆற்றில் தண்ணீர் வராததால் வெற்றிலை விவசாயம் குறைந்துள்ளது,இருப்பினும் வெற்றிலை விவசாயத்தில் ஈரப் புள்ளி என்கின்ற நோய் தாக்கல் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது பத்து நாளுக்கு ஒரு முறை ஏக்கர் ஒன்றுக்கு ஐயாயிரம் ரூபாய் செலவு செய்து மருந்து அடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விசேஷ நாட்கள் இல்லாததால் விற்பனை சற்று குறைவாக காணப்படுகிறது, இதனால் சில இடங்களில் வெற்றிலை கொடிக்காலிலேயே அறுவடை செய்யாமல் விடப்பட்டுள்ளது.
அப்படி அறுவடை செய்தால் வைப்பதற்கு குளிர்சாதன கிடங்கு எதுவும் இப்பகுதியில் இல்லை,பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை குளிர்சாதன கிடங்கு அமைக்கவில்லை.
எனவே இனிமேல் ஆவது இப்
பகுதியில் குளிர் சாதனை கிடங்கை அமைத்துத் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.