திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே வலையூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் 58 வயதான சுந்தரம். இவருக்கு கடந்த 35 வருடங்களுக்கு முன் திருமணமாகி மனைவி , ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் அழகுமுத்து. இவரது மனைவி 60 வயதான ஜோதி, மகன்கள் 25 வயதான பாரதிராஜா, 28 வயதான ராஜேஷ், மற்றும் 30 வயதான தர்மர் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். சுந்தரத்தின் வீட்டின் அருகில் உள்ள புறம்போக்கு இடம் சம்பந்தமாக அழகுமுத்து மகன்களுக்கும் சுந்தரம் குடும்பத்திற்கும் கடந்த நான்கு மாதமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக சிறுகனூர் காவல் நிலையத்தில் சுந்தரம் புகார் கொடுத்தார் .புகாரின் பேரில் இரு தரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை செய்தனர்.அப்போது சுந்தரத்திடம் இனி எந்த தகராறும் செய்யமாட்டோம் தகராறும் செய்ய மாட்டோம் என அழகு முத்து மகன்கள் எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளனர்.இந்நிலையில் நேற்று இரவு சுந்தரம் வீட்டில் இருந்தபோது அழகு முத்து மகன்கள் பாரதிராஜா, ராஜேஷ், தர்மர் மற்றும் அழகுமுத்துவின் மனைவி ஜோதி ஆகியோர் சுந்தரம் வீட்டுக்கு வந்து உன் வீட்டிற்க்கு அருகில் உள்ள இடம் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது.என்று சொன்னால் நீ கேட்க மாட்டியா என தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர்.அப்போது வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பாரதிராஜா தான் கையில் வைத்திருந்த அறிவாளால் சுந்தரத்தின் இடது முன்கை, இடது பக்க விலா,வலது முழங்காலில் வெட்டியுள்ளார்.இதில் வலி தாங்காமல் சுந்தரம் அலறி அடித்து சத்தம் போடவே அருகில் இருந்தார்கள் வருவதை பார்த்ததும் பாரதிராஜா அருவாளை காட்டி என்னைக்கி இருந்தாலும் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து படுகாயமடைந்த சுந்தரத்தை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் அழகுமுத்துவின் மனைவி ஜோதி மற்றும் மகன்கள் பாரதிராஜா, ராஜேஷ்,தர்மர் ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து பாரதிராஜாவை போலீசார் கைது செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். புறம்போக்கு இடப்பிரச்சனையில் முதியவரை அறிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.