தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் உற்சவர் திருவீதி உலா காட்சி தருகிறார்.
இந்நிலையில் உற்சவருக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று அதை தொடர்ந்து மேல தாளங்கள் முழங்க ஆலயத்தில் இருந்து கல்யாண வெங்கட்ரமண சுவாமி( ஐந்து தலை நாகம்) சர்ப வாகனத்தில் திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆலயத்தில் இருந்து புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய
வீதியில் வழியாக வலம் வந்த பிறகு ஆலயம் குடி புகுந்து.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான ஆன்மீக பக்தர்கள் வழிநெடுகிலும் தேங்காய் பழம் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.