இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் – என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை மக்கள் சக்தி இயக்கம் மிகவும் மகிழ்ச்சியுடன் , பாராட்டி வரவேற்கிறது.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழகம் தொடர்ந்து விளங்கி வருவதில் மிக்க மகிழ்ச்சி,
குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் தான் இந்தச் சாதனை என்பதை முன்னிட்டு மக்கள் சக்தி இயக்கம் உடல் உறுப்பு தானம், உடல் தானம் செய்யவர்களில் குடும்பத்திற்கு சென்று அவர்களின் தன்னலைமற்ற தியாகங்களை பாராட்டி சான்றிதழ், நினைவு பரிசுகள், குடும்ப சூழல் பார்த்து நிதியுதவிகளும் பல ஆண்டுகளாக செய்து வருகிறோம்.
தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில் அரசு மரியாதை செய்வதுடன், அரசு மருத்துவமனையில் உடல் உறுப்புகளை தானம் செய்யும் குடும்பத்தினர் (தன்னலமற்ற தியாகம் ) ஒருவருக்கு அரசு வேலை (or) ( தியாகிகள் ஊக்கத் தொகை ) மாத ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என மக்கள் சக்தி இயக்கம் மாநில முதல்வரிடம் கேட்டுக் கொள்கிறது. மக்கள் சக்தி இயக்கம் பல ஆண்டுகளாக இந்த சிறந்த பணியை செய்து வருகிறது.