தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தின் 31 வது பட்டமளிப்பு விழாவில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவரும் – பல்கலைக்கழகத்தின் வேந்தருமான கி.வீரமணி கலந்து கொண்டு மாணவ – மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது…
நீட் தேர்வு எந்த வகையிலும் அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை, அதனால் மோடி அரசே அதை ஜீரோ ஆகிவிட்டது. மோடி அரசின் ஊழல் வெளியே வரக்கூடாது என்பதற்காக சனாதனம் குறித்த திசைதிருப்பல். மகளிர் இட ஒதுக்கீடு கானல் நீர் போன்றது. வரும் ஆனால் வராது என கூறினார்.
சனாதானம் என்றால் என்ன என்று குழப்பிக் கொண்டு இருந்தார்கள். இப்போது அது என்ன என்பதை நீதிமன்றத்தில் சொல்வதற்கு எங்களுக்கு நல்வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மோடி அரசின் ஊழல் வெளியே வரக்கூடாது என்பதற்காக இந்த சனாதனம் குறித்த திசை திருப்பல். நீட் ஜீரோ ஆகிவிட்டது என்று மோடி அரசே ஒப்புக் கொண்டு விட்டது. அவர்களே ஜீரோவாக்கி விட்டார்கள். நாங்கள் ஆக்கவில்லை. நீட் தேர்வு அதன் நோக்கத்தை எந்த வகையிலும் அதன் நோக்கத்தை நிறைவேற்ற வில்லை என்று மோடி அரசே ஒப்புக் கொண்டு விட்டதற்கான அடையாளம் இது. நீட் தேர்வு நடத்தியும் எந்த பயனும் இல்லை என்று தெரிந்து விட்டது. பின்னரும்
நீட் தேர்வு நடவதற்கான காரணம் கார்ப்பரேட்டுகளும் – கனவான்களும் கொள்ளையடிப்பதற்காகவே, ஏழைகளை தடவி தடவி மொட்டை அடிப்பதற்கு தான் நீட் இருக்கிறது என்று புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி மாறும் காட்சி மாறும் நீட் ஜீரோ ஆகும். மகளிர் இட ஒதுக்கீடு கானல் நீர் போன்றது அது வரும் ஆனால் வராது மகளிர் இட ஒதுக்கீடு வந்தது ஆனால் கிடைக்காது என அவர் தெரிவித்தார்.