திருச்சியில் இருந்து குஜராத் மாநிலம் கங்கா நகர் செல்லும் ஹம்சாபாத் வாராந்திர எக்ஸ்பிரஸ் இன்று மதியம் குஜராத் மாநிலம் வல்சாத் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது, இன்ஜினுக்கு பின்னால் உள்ள 2 பெட்டிகளில் திடீரென தீப்பிடித்தது. உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து தீ அணைக்கப்பட்டது. அதன் பின்னர் ரயில்வே அதிகாரிகள் வந்து தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் ரயில் புறப்பட்டது.