சர்வதேச தினை ஆண்டு மற்றும் தேசிய ஊட்டச்சத்து வாரம் 2023 இன் முன்னிட்டு திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியின் (தன்னாட்சி) உணவு மற்றும் ஊட்டச்சத்து முதுகலை துறை சார்பாக திணை ஊட்டச்சத்து உணவு குறித்த கண்காட்சி இன்று நடைபெற்றது.
இந்த கண்காட்சியினை பிஷப் ஹீபர் கல்லூரி (தன்னாட்சி) துணை முதல்வர் சத்தியசீலன் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் சத்தான உணவு பொருட்கள் இணை உணவை மையமாக வைத்து அவற்றின் முக்கியத்துவத்தை விளக்கும் விதமாக கண்காட்சி நடைபெற்றது. அதே சமயம் நமது பாரம்பரியம் ஊட்டச்சத்து
மிக்க சத்தான உணவு பொருட்களை வைத்து செய்யப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தப்பட்டது.
மேலும் அவற்றின் முக்கியத்துவம் அதில் உள்ளடக்கிய மருத்துவ குணங்கள் குறித்து மாணவ ,மாணவிகளுக்கு விளக்கப்பட்டது. இந்த கண்காட்சியின் மொத்தம் 24 கடைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு கடைகளிலும் திணை பொருளால் செய்யப்பட்ட இயற்கையான சத்தான உணவு வகைகளை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது..