திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே தீராம்பாளையம் பாறைகொட்டத்தைச் சேர்ந்தவர் நாராயணன். இவருக்கு சொந்தமான டிப்பர் லாரியை ஓட்டுநரை வைத்து ஓட்டி வந்துள்ளார்.இந்நிலையில் மண்ணச்சநல்லூர் பகுதியில் அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் கடத்துவதாக திருச்சி கனிமவள சிறப்பு வட்டாச்சியர் ரமேஷிற்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த சிறப்பு வட்டாச்சியர் தலைமையில் கனிமள அதிகாரிகள் மண்ணச்சநல்லூரில் உள்ள திருச்சி துறையூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது பூனாம்பாளையம் பகுதியில் வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனை செய்தபோது டிப்பர் லாரியில் அனுமதியின்றி 3 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. லாரி டிரைவர் அங்கிருந்து தப்பிசென்றார்.இதனைத் தொடர்ந்து டிப்பர் லாரியில் இருந்த மூன்று யூனிட் கிராவல் மண் மற்றும் ஒரு செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்த சிறப்பு கனிம வள வட்டாட்சியர் ரமேஷ் மணச்சநல்லூர் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட லாரி கிராவல் மண் செல்போன் ஆகியவற்றை ஒப்படைத்தார். இது குறித்து சிறப்பு வட்டாட்சியர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.