தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஒவ்வொரு நாளும், அதிமுக தலைவர்களை தாக்கிப்பேசுவதையும், அவர்களது புகழுக்கு களங்கம் விளைவிப்பதையும் மட்டுமே வேலையாக செய்து வருகிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாஜகவுடன் எங்களுக்கு கூட்டணி இல்லை என்றார். மறுநாளே பாஜகவை பற்றி யாரும் விமர்சிக்க வேண்டாம் என அதிமுக தலைமைக்கழகம் சார்பில் செய்தி வெளியிடப்பட்டது.
ஆனாலும் அண்ணாமலை கொஞ்சம் வட இறங்கி வரவில்லை. நான் சரியாகத்தான் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்று மீண்டும் தன் நிலைப்பாட்டைஉறுதிப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அண்ணாமலையை தேர்தல் வரைக்குமாவது அடக்கி வையுங்க. அதாவது அவரது வாய மட்டும் அடக்கி வையுங்க என டில்லி பாஜக மேலிடத்தில் சொல்ல அதிமுக முன்னோடிகள் டில்லிக்கு விரைந்து உள்ளனர்.
அ.தி.மு.க. கட்சியின் மூத்த தலைவர்கள் வேலுமணி, சி.வி. சண்முகம், நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி ஆகியோர் அவசரமாக டில்லி புறப்பட்டு சென்றுள்ளனர். அங்கு தம்பிதுரையையும் அழைத்துக்கொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து அண்ணாமலையை கொஞ்சம் பாத்து பேச சொல்லுங்க. இப்படி பேசினால் மக்களிடம் போய் எப்படி ஓட்டு கேக்க முடியும் , எனவே தேர்தல் வரைக்குமாவது பேச்சை குறைக்க சொல்லுங்க, அதிமுகவை தாக்கி பேசாமல் , திமுகவை மட்டும் தாக்கி பேசும்படி சொல்லுங்கள் . அப்படி பேசினால் தான் நாம் ஓட்டு வாங்க முடியும் என சொல்வார்கள் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.