Skip to content
Home » வந்தேபாரத் ரயில் கட்டணம் சென்னை-நெல்லைக்கு சாதாரண ஏசி கட்டணம் ரூ.1610

வந்தேபாரத் ரயில் கட்டணம் சென்னை-நெல்லைக்கு சாதாரண ஏசி கட்டணம் ரூ.1610

  • by Senthil

சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு  வருகிற 24ம் தேதி முதல்  வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலுக்கான  கட்டண விவரம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண ஏசி சேர் கார் கட்டணமாக, அடிப்படை கட்டணம் ரூ.1,155, முன்பதிவு கட்டணம் ரூ.40, அதிவிரைவு கட்டணம் ரூ.45, உணவு கட்டணம் ரூ.308 மற்றும் ஜி.எஸ்.டி ரூ.62 சேர்த்து மொத்தமாக ரூ.1,610 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல் வகுப்பு ஏசி சேர் கார் கட்டணமாக, அடிப்படை கட்டணம் ரூ.2,375, முன்பதிவு கட்டணம் ரூ.60, அதிவிரைவு கட்டணம் ரூ.75, உணவு கட்டணம் ரூ.369 மற்றும் ஜி.எஸ்.டி ரூ.126 சேர்த்து மொத்தமாக ரூ.3,005 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு  சாதாரண ஏசி சேர் கார் கட்டணமாக, அடிப்படை கட்டணம் ரூ.1,154, முன்பதிவு கட்டணம் ரூ.40, அதிவிரைவு கட்டணம் ரூ.45, உணவு கட்டணம் ரூ.364 மற்றும் ஜி.எஸ்.டி ரூ.62 சேர்த்து மொத்தமாக ரூ.1,665 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் வகுப்பு ஏசி சேர் கார் கட்டணமாக, அடிப்படை கட்டணம் ரூ.2,375, முன்பதிவு கட்டணம் ரூ.60, அதிவிரைவு கட்டணம் ரூ.75, உணவு கட்டணம் ரூ.419 மற்றும் ஜி.எஸ்.டி ரூ.126 சேர்த்து மொத்தமாக ரூ.3,055 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் டிக்கெட்டுகள் வேகமாக முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!