மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே மதுரை – திண்டுக்கல் ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை சுமார் 6 மணிக்கு காவலர் சீருடையுடன் பெண் ஒருவர் 2 குழந்தைகளுடன் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த சமயநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடல்களை மீட்டு விசாரித்தனர். விசாரணையில், அவர் திருப்பாலையைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் மனைவி ஜெயலட்சுமி (30) மற்றும் அவர்களது மகன் காளிமுத்து ராஜா (9), மகள் பவித்ரா (11) என தெரிந்தது.
ஜெயலட்சுமி மதுரை ரயில்வே போலீசில் கிரேடு- 1 காவலராக பணிபுரிந்து வந்தவர் என்பது தெரியவந்தது. மருத்துவ விடுமுறையில் இருந்த நிலையில், தனது 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக சமயநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.. ஜெயலட்சுமி மதுரையில் இருந்து வேறு ஊருக்கு சமீபத்தில் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். ஆனாலும் மாறுதலான இடத்திற்கு செல்லாமல் அவர் மருத்துவ விடுப்பில் இருந்துள்ளார். இதற்கிடையில், தான் அவர் நேற்று 2 குழந்தைகளுடன் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்திருப்பதாக தெரிகிறது. அவரது கணவர் சுப்புராஜ் தனியார் நிறுவனத்தில் பணிபுகிறார். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்தபோது, ஜெயலட்சுமிக்கு இன்னொரு போலீஸ்காரருடன் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆர்பிஎப் தலைமை காவலரான சொக்கலிங்க பாண்டியனும், காவலர் ஜெயலட்சுமியும் தகாத உறவில் இருந்ததாக தெரியவந்தது.
இந்தநிலையில் இன்று தகாத உறவில் இருந்த ஆர்பிஎப் தலைமை காவலர் சொக்கலிங்க பாண்டியனும் கோவில்பட்டி அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.