தென் தமிழகத்தின் முதல் வந்தே பாரத் ரயில் நெல்லை -சென்னை இடையே வரும் 24 ஆம் தேதி இயக்கப்படுகிறது. தொடக்க விழாவில் காணொளி காட்சி வாயிலாக பிரதமர் கலந்து கொண்டு ரயில் சேவைகளை தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான சோதனை ஓட்டத்தின் போது நெல்லையிலிருந்து திருச்சி ரயில் நிலையம் வந்தடைந்த வந்தே பாரத் ரயிலினை ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தலைமையிலான அதிகாரிகள்
திருச்சி ரயில் நிலையத்தில் ரயில் சேவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். திருச்சிக்கு காலை 9.50 மணிக்கு வந்தடைந்த வந்தே பாரத் ரயில் ஐந்து நிமிடம் நின்று மீண்டும் 9:55க்கு சென்னையை நோக்கி புறப்பட்டுச் சென்றது . இந்த வந்தே பாரத் ரயிலினை அங்கு இருந்த பயணிகள் பலரும் பார்த்து ரசித்தனர் .