திருச்சி மாவட்டம் முசிறியை அருகே குணசீலம் ஊராட்சியில் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்தில் ஆளாகியுள்ளனர்.
மின்சாரம் இல்லாததால் அப்பகுதியில் குடிநீர் வசதியும் இல்லை இது குறித்து பஞ்சாயத்து நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த 500 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் குணசீலம் பஞ்சாயத்து அலுவலகத்தை காலி குடங்களுடன் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.