Skip to content

போலி தங்க கட்டிகளை விற்பதாக பணம் பறித்த 4 பேர் கைது… திருச்சி எஸ்பி எச்சரிக்கை…..

  • by Authour

திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் அவர் கூறியதாவது :-

கடந்த 18ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ஜியாவுதீன் என்பவரை தொடர்பு கொண்ட ஒரு கும்பல் தங்களிடம் தங்க கட்டிகள் இருப்பதாகவும் அதை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளிலிருந்து வாங்கிய அந்த தங்க கட்டிகள் 15 லட்சம் ரூபாய் என தெரிவித்துள்ளனர். அதனை நம்பி ஜீயாவுதீன் தொடர்ந்து அந்த நபர்களிடம் பேசி வந்துள்ளார். அவர்கள் ஜியாவுதீனை திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள ஒரு இடத்திற்கு வரக்கூறி உள்ளனர். 14.50 லட்சம் ரூபாய் பணத்துடன் ஜியாவுதின் அங்கு வந்துள்ளார்.

அவரிடம் பணம் இருப்பதை உறுதி செய்த அந்த கும்பல் காவல்துறையினர் போல் சீருடை

அணிந்து அவர்களிடம் வந்துள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த அந்த பணத்தையும் பறித்து சென்றுள்ளனர். இது குறித்து ஜியாவுதீன், துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தனிப்படை அமைத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் ஜியாவுதீனிடம் பணம் பறித்த அனீஸ் ஜேம்ஸ், சக்திவேல், சரவணன்,பெருமாள் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 கிராம் தங்க கட்டி, 10 போலி தங்க கட்டிகள், 2.70 லட்சம் ரூபாய் பணம், 21 செல்போன்கள், போலி பத்திரங்கள், இரண்டு காசோலை புத்தகங்கள், வாகனத்தின் இரண்டு போலி பதிவின் பலகைகள், தமிழ்நாடு அரசு முத்திரை கொண்ட சிவில் ஜட்ஜ் என எழுதப்பட்ட லோகோ, 12 சிம் கார்டுகள் மற்றும் ஒரு கார் ஆகியவற்றை பறிமுதல் செய்ததாகவும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இதே கும்பல் கடந்த ஜனவரி மாதம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பாலசுப்பிரமணியன் என்பவரிடம் தங்க கட்டிகளை விற்பனை செய்வதாக கூறி ரூ.10.50 லட்சம் பணத்தை பறித்து சென்றது தெரியவந்தது.

இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகின்றோம். பொதுமக்கள் இதுபோல் எதையும் நம்பி ஏமாற வேண்டாம். அது போல் யாரும் இதற்கு முன்பு ஏமாந்து இருந்தால் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.

பணம் பறிப்பதற்கு முன்பாக திட்டமிடும் அந்த கும்பல் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு நகைகளை வாங்க வந்தவர்களை வரக்கூறி உள்ளனர்.
அவர்களிடம் பணம் இருப்பதை உறுதி செய்த பின்பு போலீசார் வருவதாக கூறி அவர்களிடம் பணத்தை பறித்துவிட்டு செல்கின்றனர். இதுபோல்தான் அவர்கள் ஏற்கனவே செய்துள்ளனர். வேறு ஏதேனும் குற்றங்களில் இவர்கள் ஈடுபட்டு உள்ளார்களா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *