விநாயகர் சதுர்த்தியையொட்டி தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை தேரடி அருகில் ஸ்ரீ விஸ்வ ரூப விநாயகர் விழாக் குழுச் சார்பில் விநாயகர் சிலை 18 ந் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. 19 ந் தேதி சிறப்பு வழிபாடு நடந்தது. 20 ந் தேதி ஊர்வலமாகப் புறப்பட்டு அய்யம் பேட்டை குட முருட்டி ஆற்றில் விசர்ஜனம் செய்யப் பட்டது.
மேலும் பாபநாசத்தில் திருப்பாலைத் துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று முன் தினம் திருப்பாலைத் துறை, ரயில்வே கேட் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 20 க்கும் மேற்ப் பட்ட விநாயகர் சிலைகள் இரவு ஊர்வலமாக மெயின் சாலை வழியாக
எடுத்துச் செல்லப்பட்டு கபிஸ்தலம் காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப் பட்டன. பாபநாசம் டி.எஸ்.பி பூரணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதேப் போன்று மெலட்டூர் காவல் நிலைய சரகத்திற்குள் இரும்புத் தலை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வைக்கப் பட்டிருந்த 11 விநாயகர் சிலைகள் நேற்று முன் தினம் இரவு வெட்டாறு, வெண்ணாற்றில் விசர்ஜனம் செய்யப் பட்டன.