கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள புங்கம்பாளையத்தை சேர்ந்தநவநீதகிருஷ்ணன் என்பவர் கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் வசித்து வருகிறார்.
இன்று அதிகாலை நவநீத கிருஷ்ணன் வீட்டில் குட்டியுடன் நுழைந்த காட்டு யானைகள் அவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியது.
அதன் பின்னர் வீட்டின் கதவை உடைத்த காட்டு யானைகள் வீட்டில் கால்நடைகளுக்காக வைத்திருந்த சோளமாவை துதிக்கையால் அள்ளி அள்ளி தின்றது. பின்னர் சோளமாவு மூட்டைகளை காலால் மிதித்து சேதப்படுத்தியது.
இதனை கண்ட வீட்டின் உரிமையாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள மற்றொரு அறைக்கு ஓடி சென்று உயிர் தப்பினர் வெகுநேரமாக அங்கேயே உலா வந்த யானைகள் பின்னர் அங்கிருந்து மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றன.
கூட்டாட்சி மலை பகுதியில் இருந்து யானைகள் வெளியேறும் சூழல் சமீபகாலமாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது குடியிருப்புகளை யானைகள் தாக்கி வருவதால் அந்த பகுதி மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.