Skip to content

வேலாயுதம்பாளையத்தில் விநாயகா் சிலைகள் காவிரி ஆற்றில் கரைப்பு…

  • by Authour

இந்துக்களின் முதன்மைக் கடவுளாக விளங்குபவர் மகா கணபதி, ஆண்டுதோறும் சதுர்த்தி விழா நாடு முழுதும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியேட்டி இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்பின் சார்பில் விநாயகர் சிலை வைத்து பல்வேறு பூஜை நடத்தி வழிபட்டனர்.

விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அருகம்புல் மாலை எள்ளெருக்கு மாலை சாத்தி அவருக்கு

பிடித்தமான அவுல் பொரிகடலை மற்றும் கொலுக்கட்டை வைத்து படையலிட்டு வழிபட்டனர்.

இதனை தொடர்ந்து இந்து முன்னணி சார்பில் பல்வேறு வடிவங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வேலாயுதம்பாளையம் பகுதியில் உள்ள முருகன் கோவில் முன்பு வரிசையாக நிறுத்தி மலை வீதி ரவுண்டானா உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஏராளமான இளைஞர்கள் நடனமாடி உற்சாகமாக கொண்டு சென்று காவிரி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்பட்டது .

இந்த ஊா்வலத்திற்கு பாதுகாப்பு பணிக்காக 200 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!