Skip to content

கரூரில் உணவகங்களில் சோதனையிட சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..

கரூர் மாநகராட்சி பகுதிகளில் செயல்படும் அசைவ உணவகங்களில் மாநகர் நல அலுவலர் லட்சியவர்ணா தலைமையில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர்.

கோவை சாலையில் அமைந்துள்ள உணவகங்களில் நடந்த சோதனையின் போது கொத்து புரோட்டா செய்வதற்காக குப்பை தொட்டி அருகில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அளித்தனர். தடை செய்யப்பட்ட

 

பிளாஸ்டிக் பொருட்கள், வீட்டு உபயோக சிலிண்டர்கள் பயன்படுத்துவது கண்டுபிடிப்பு.

துரித உணவுப் பொருட்கள் தயார் செய்யும் கடைகளில் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன.
80 அடி சாலையில் அமைந்துள்ள கடை ஒன்றில் சோதனைக்கு சென்ற அதிகாரிகளிடம் அந்த கடையின் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும், இன்று நடைபெற்ற சோதனையில் சுமார் 20 கிலோ அளவில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்காக 5 கடைகளுக்கு சுமார் 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!