விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டது.ஒவ்வொரு சிலைக்கும் 24 மணி நேரம் போலீஸ் பாதுகாப்புடன் தீவிர கண்காணிப்பு வைக்கப்பட்டு இருந்தது.
கடந்த 3 நாட்களாக சிலைகளுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.இந்த நிலையில் கோவை மாநகரில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு குறிச்சி, குனியமுத்தூர்,சிங்காநல்லூர் குளங்களில் கரைக்கப்பட்டது.
பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆங்காங்கே வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை ஒரே இடத்தில் கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக செல்ல வேண்டும் எனவும் விநாயகர் சிலைகள் மேள தாளம் முழங்க
பட்டாசுகள் வெடித்து லாரி மற்றும் வேனில் ஏற்றப்பட்டு ஒரு இடத்துக்கு கொண்டு வரப்பட்டன.
சிலைகளை வாகனங்களில் ஏற்றி வந்தவர்கள் சிலையை இறக்கி போலீசாரிடம் ஒப்படை வேண்டும் போலீசார் அந்த சிலைகளை குளத்தில் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.குளத்திற்குள் போலீசாரை தவிர வேறு யாரையும் இறங்க அனுமதி இல்லை.
மேலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குளங்களில் தீயணைப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பெரிய சிலைகளை ஒரு இடத்திலும்,சிறிய சிலைகள் ஒரு இடத்திலும் கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கோவை மாநகரில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க குனியமுத்தூர்,குறிச்சி,R.S புரம் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.