மயிலாடுதுறையில் தலைமை தபால் நிலையம் முன்பு தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்று தர கோரி காவிரி படுகை பாதுகாப்பு இயக்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு விவசாய சங்கத் பொறுப்பாளர் சிம்சன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் காவிரியில் கர்நாடகம் வழங்க வேண்டிய சட்டரீதியான தண்ணீரை உடனடியாக திறந்திட உச்சிநீதிமன்றம் அவசர வழக்காக எடுத்து உடன் உத்திரவிட வேண்டும். குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு தலா ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும். காவிரியில் தமிழகத்துக்கு மாதவாரியாக தண்ணீர்வழங்க மத்திய, மாநில அரசுகள்
நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அரசு மறுத்தால் அம்மாநிலத்தில் உள்ள அணைகளை காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து தண்ணீர் வழங்கிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை டில்சி பள்ளி இருந்து விவசாயிகள் பேரணியாக வந்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி, நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம், உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை சார்ந்த விவசாயிகள், கட்சியினர் நூற்றுக்கு மேற்பட்ட கலந்து கொண்டு இன்று ஒரு நாள் தொடர் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.