திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே புதூர் உத்தமனூர் தெற்கு ஆர்சி கோவில் தெருவை சேர்ந்தவர் ஜான் கென்னடி என்பவரது மகன் அஜய் கார்லின்ஸ் வயது (27) நேற்று இரவு சம்பவத்தன்று இருங்களூர் கைகாட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது திருவனைக்கோவில் திம்மராயசமுத்திரத்தைச் சேர்ந்தவர் அருள்மொழி என்பவர் மகன் விக்கி (என்ற) விக்னேஷ்(23),அதே ஊரைச் சேர்ந்த சேதுராஜ் என்பவர் மகன் சந்தோஷ்குமார் (22),திருவெறும்பூர் கும்பக்குடி சூரியூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரது மகன் வசந்தகுமார் (24), ஆகிய மூவரும் அஜய் கார்லின்ஸிடம் கழுத்தில் கத்தியை வைத்து பணம் செல் போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இச்சம்பவம் குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் அவர் புகாரின் பேரில் தப்பிச்சென்ற மூன்று பேரை போலீசார் தேடி வந்த நிலையில் விக்கி என்ற விக்னேஷ் மட்டும் பிடிபட்டார் அவரிடம் இருந்த ரூபாய் 4 ஆயிரம் மற்றும் கத்தி போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது பின்னர் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் மற்ற இருவரை தேடி வந்த நிலையில் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த வசந்தகுமாரை அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரைப் பிடித்து விசாரித்ததில் சமயபுரம் மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் செல்போன் பணம் திருடியதை ஒப்புக் கொண்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். தப்பிச்சென்ற சந்தோஷ் குமாரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.