தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் , குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தமிழ்நாட்டின் புத்தொழில் சூழமைவை மேம்படுத்தும் வகையில் 50க்கும் மேற்பட்ட செயல் திட்டங்களை உள்ளடக்கிய ” தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க கொள்கை-2023” னை வௌியிட்டார். இந்த நிகழ்ச்சியில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண் ராய், தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் சிவராஜா இராமராதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.