தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியில் கடந்த 3 நாட்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. மாலை 6 மணிக்கு தொடங்கும் இந்த பனிப் பொழிவு மறுநாள் காலை 8 மணி வரை நீடிக்கிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் அவதி அடைந்தனர். இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களில் முன் விளக்குகளை ஒளிரவிட்டவாறு சென்றனர். அதேபோல் கடலுக்குள்ளும் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.