விநாயகர் சதுர்த்தி பண்டிகை கடந்த 18ஆம் தேதி திருச்சி மாநகரில் கோலாலமாக கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தினமும் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வந்த மக்கள் 3 வது நாளான இன்று காவேரி ஆற்றங்கரையில் தங்களுடைய குடும்பத்துடன் வந்து சிலையை கரைத்து செல்கிறார்கள். மாலை திருச்சி
மாநகரில் வைக்கப்பட்டுள்ள பெரிய சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு காவேரி ஆற்றில் கரைக்கப்பட உள்ளதால் இன்று பாதுகாப்பு பணியில் 1850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். திருச்சி மாநகரில் இதற்காக போக்குவரத்து வழித்தடங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.