திருச்சி மாவட்டம், அரியமங்கலம் அடுத்து கைலாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் மின்வாரியத்தில் இருந்து ஓய்வு பெற்ற கனகராஜ் மகன் கிள்ளிவளவன் வயது 45, இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர் லால்குடி அருகே உள்ள தனியார் (ஹச்.டி.எஃப்.சி) வங்கி கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் கிள்ளிவளவன் வழக்கம்போல் வங்கி பணி முடித்துவிட்டு லால்குடியில் இருந்து அரியமங்கலம் கைலாஷ்நகரில் உள்ள அவரது வீட்டிற்கு ஹெல்மெட் அணிந்து இரு சக்கர வாகனத்தில் பாதுகாப்பாக சென்றார்.
அப்போது திருச்சியில் இருந்து லால்குடி நோக்கி மதுபோதையில் அரியமங்கலத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர் குட்டி யானை ஓட்டிச் சென்றபோது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் இரு சக்கர வாகனத்தில் ஓட்டி வந்த தனியார் வங்கி கிளை மேலாளர் கிள்ளிவளவன் படுகாயம் அடைந்தார். மேலும் இரு சக்கர வாகனம் அப்பளம் போல் நொறுங்கியது. அப்பகுதி மக்கள் கிள்ளிவளவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சமயபுரம் போலீசார் சம்பவ இடத்தில் மது போதையில் இருந்த கார்த்திகை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.