Skip to content

நாகை அருகே தடுப்புச்சுவர் மீது பைக் மோதி 4 வயது குழந்தை பலி…

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள காமேஸ்வரம் ஆனையன்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்

அருள்.இவரது மனைவி
பிரபா. இந்த தம்பதிக்கு வர்ஷா(4), நிஷாலினி(7) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இன்று காமேஸ்வரத்திலிருந்து திருப்பூண்டிக்கு பைக்கில் அருள், பிரபா மற்றும் வர்ஷா
ஆகிய 3 பேரும் சென்றுள்ளனர்.
தென்னம்பிள்ளை சாலையோரத்தில் கீழ்க்குமிழி தடுப்பு சுவரில்
பைக் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் வர்ஷாவுக்கு தலை நசுங்கி பலந்த காயங்களுடன்
ரத்த வெள்ளத்தில், சாலையில் சென்றவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாகை
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தீவிர
சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 4 வயது குழந்தை வர்ஷா
தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள்
தெரிவித்தனர். மேலும் அருள், பிரபா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. குழந்தை இறந்த
சம்பவம் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதது நெஞ்சை பதறவைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!