நாகையில் 20 ஆண்டுகளுக்கு முன், 17 1/2 கோடி ரூபாய் மதிப்புள்ள தொன்மைவாய்ந்த புத்தர் சிலை களவு போனது குறித்து, இந்து சமய அறநிலையத்துறை வழக்குப்பதியவில்லை; சோழர்கால புத்தர் சிலை, அமெரிக்காவில் இருப்பது தெரிந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்,மாணிக்கவேல் குற்றச்சாட்டு;
சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் இன்று நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாட்சி அம்மன் கோவில் மற்றும் புதுப்பிக்கப்பட்டு வரும் சோழர்கால சூடாமணி விகாரத்தை பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து கூறிய அவர்,
நாகப்பட்டினம் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள 1016 ஆண்டுகள் தொன்மையான சூடாமணி விகாரத்தில் இருந்த 17,1/2 கோடி ரூபாய் புத்தர் சிலை 20,ஆண்டுகளுக்கு முன் களவு போனதாகவும், அதுகுறித்து இந்துசமய அறநிலையத்துறையும், காவல்துறையும் இதுவரை எஃப் ஐ ஆர் பதிவு செய்யவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் களவு போன சோழர் கால புத்தர் சிலை, அமெரிக்காவில் இருப்பதாகவும், சோழர்கால புத்தர் சிலை,
அமெரிக்காவில் இருப்பது தெரிந்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்? என வினா எழுப்பிய அவர், அதனை இந்தியாவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும் சிலை களவு சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யார்? என்பதை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள சிலைகள் கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல், இந்த விவகாரத்தில் சீமான், அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை ஆகியோர் தமிழக அரசுக்கு அழுத்தம் தந்து கலாச்சார பொக்கிஷங்களை பாதுகாக்க குரல் எழுப்ப வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.