பெரம்பலூர் அருகே உள்ள கே.எறையூர் பிரிவு சாலையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தங்களுக்கு தனியாக நியாய விலை கடை, குடிநீர் வசதி சாலை வசதி 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கியமான அடிப்படை வசதிகள் இல்லை என கோரிக்கை விடுத்து சுமார் 20 க்கும் மேற்பட்டபெண்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி மனு அளித்தனர்.