பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வேங்கட பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மூதாட்டி ஒருவர் முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்தார் அப்பொழுது மனுவை ஜெராக்ஸ் எடுப்பதற்காக ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் என்னவென்று கேட்ட பொழுது மனுவை ஜெராக்ஸ் எடுக்க வேண்டும் என்னால் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை என்று கூறினார் மூதாட்டி. உடனே காவலர் ராமராஜ் மனுவைப் பெற்று இரண்டு ஜெராக்ஸ் போட்டு மனுவை மூதாட்டி இடம் கொடுத்தார். இதனைப்பார்த்தபொதுமக்கள் காவலருக்கு பாராட்டு தெரிவித்தனர்.