Skip to content
Home » ரஜினிக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ….

ரஜினிக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ….

  • by Authour

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர், அக்டோபர் 5-ம் தேதி  இந்தியாவில்தொடங்கி ஒருமாதம்  நடைபெறவிருக்கிறது. இந்த போட்டிகளை சிறப்பு மாடத்தில் அமர்ந்து கண்டுகளிப்பதற்கான ‘கோல்டன் டிக்கெட் ஃபார் இந்தியன் ஐகான்ஸ்’ என்ற திட்டத்தின் கீழ் டிக்கெட்டுகள் அந்தத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அந்த வகையில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு இந்த கோல்டன் டிக்கெட் அண்மையில் வழங்கப்பட்டது. அவரைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டரும், நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா பெற்றவருமான சச்சின் டெண்டுல்கர் இந்த டிக்கெட்டைப் பெற்றார்.

இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, உலக கோப்பை போட்டிகளை கண்டுகளிப்பதற்கான கோல்டன் டிக்கெட்டை வழங்கி கவுரவித்துள்ளார். 2023 ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளை முரசறைந்து வரவேற்கும் விதமாய், பல்துறைகளின் பிரபல நட்சத்திரங்களுக்கு கோல்டன் டிக்கெட் வழங்கப்படுகிறது. இதன் மூலம் கிரிக்கெட் போட்டியை வரவேற்கும் விதமாகவும், ரசிகர்கள் மத்தியிலான கொண்டாட்ட மனநிலைக்கு இசைவாகவும் இவை மேற்கொள்ளப்படுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *