Skip to content
Home » ஈஷாவில் பயிற்சிக்கு சென்ற பெண் சடலமாக மீட்பு….

ஈஷாவில் பயிற்சிக்கு சென்ற பெண் சடலமாக மீட்பு….

  • by Authour

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிகுமார். இவரது மனைவி சுபஸ்ரீ. கடந்த மாதம் 11ம் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்காக வந்த சுபஸ்ரீ”யை 18ம் தேதி அழைத்து செல்ல அவரது கணவர் வந்த பொழுது சுபஸ்ரீ ஈஷாவில் இருந்து மாயமானது தெரிய வந்தது.

பின்னர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் சுபஸ்ரீ சாலையோரம் ஓடி செல்வது பதிவாகி இருந்தது.

இது குறித்து பழனிக்குமார் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை அடுத்து 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் சுபஸ்ரீ யை தேடி வந்தனர்.

இந்நிலையில் செம்மேடு பகுதியில் விவசாய தோட்டத்தில் இருக்கும் கிணற்றில் சுபஸ்ரீ உடல் சடலமாக மீட்கப்பட்டது.

பின்னர் அவரது உடல் கோவை அரசு மருத்துமனையில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது.

உடற்கூறு ஆய்வு அறிக்கையில், நுரையீரலில் நீர் இறங்கியுள்ளதாகவும் – அவரது உடலில் எவ்வித காயங்களும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என கோவை தெற்கு  வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈஷாவிலிருந்து மாயமான பெண் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், காவல்துறை அவசர அவசரமாக பிரேத பரிசோதனை முடித்து உடலை ஒப்படைத்துள்ளதாகவும், அடுத்தடுத்து ஈசா யோகா மையத்தில் நடைபெறும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தால் காவல்துறையால் மறைக்கப்படுகிறதோ என்கிற ஐயம் எழுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

ஆகவே இது குறித்த விசாரணையை மேற்கொள்ள சிறப்பு கவனத்தை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி
நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜன் கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *