நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா சிறப்பு கூட்டம் குறித்து விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர் காலநிலை மாற்றம், சுற்றுச்சுசூழல் பாதுகாப்பு, ஜி20 மாநாடு குறித்து விளக்கினார். விரைவில் ஜி 20 நாடுகளில் எம்.பிக்கள் கூட்டம் நடைபெறும் என்றும், மாநாட்டை சிறப்பாக நடத்திய மோடிக்கு பாராட்டு தெரிவித்தும் பேசினார்.
இந்த நாடாளுமன்ற கட்டிடம் 12 பிரதமர்களை பார்த்து உள்ளது. இந்த கட்டிடம் உன்னதமான நிகழ்வுகளை கண்டுள்ளது. நாட்டின் நலன் கருதி இந்த அவை பல முடிவுகளை எடுத்துள்ளது. இந்த கட்டிடத்தின் நிகழ்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது என்றும் சபாநாயகர் கூறினார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடி பேசத் தொடங்கினார்.
வருகிற 22-ந்தேதி வரை ஐந்து நாட்கள் கூட்டம் நடக்கிறது. முதல்நாளான இன்று 75 ஆண்டுகால பாராளுமன்றத்தின் சாதனைகள், நினைவுகள் போன்ற முக்கியம்சங்கள் குறித்து விவாதம் நடைபெற இருக்கிறதுநாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் மற்றும் தேசத்தின் சாதனைகள் குறித்து பிரதமர் மோடி மக்களவையில் பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.