தஞ்சை மாவட்டம், அய்யம் பேட்டை அடுத்த கணபதி அக்ரஹாரம் ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தில் விநாயக சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மோத்சவம் நடந்தது. 8 ந் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. 9 ந் தேதி தொடங்கி நேற்று முன் தினம் வரை சுவாமி மூஷிக, காமதேனு, பூத, சிம்ம, வ்ருஷப, யானை, சேஷ, கற்பக விருட்ச ,குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தது. நேற்று சுவாமி தேரில் எழுந்தருள, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. பட விளக்கம்: கணபதி அக்ரஹாரம் ஶ்ரீ மஹா கணபதி ஆலய தேரோட்டம் நடந்தது.
