Skip to content
Home » வீலீங் செய்த போது விபத்து.. உயிர் தப்பிய டிடிஎப் வாசன்..

வீலீங் செய்த போது விபத்து.. உயிர் தப்பிய டிடிஎப் வாசன்..

யூடியூபில் பிரபல டிராவல் பிளாகராக வலம் வரும் கோவையைச் சேர்ந்த டிடிஎஃப் வாசனுக்கு லட்ச கணக்கான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர். இவரது ஃபாலோயர்களில் பெரும்பாலானோர் இளம் தலைமுறையினர். கடந்த ஆண்டு இவர் தனது பிறந்தநாளை ஒட்டி, தன்னைப் பின்தொடர்வோருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். இந்த மீட்டப்பில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் போலீஸ் எச்சரிக்கும் அளவுக்கு அது சென்றது. அவரது அழைப்பை ஏற்று வந்த ஆயிரக்கணக்கானோரில் பலரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். டிடிஎஃப் வாசன் தனது டூவீலரில் அடிக்கடி வேகமாக செல்வது வீலீங் செய்து சர்ச்சையில் சிக்குவார். போலீஸார் அவர் மீது வழக்கு தொடர்ந்து, எச்சரித்து அனுப்புவது வழக்கம். இந்த நிலையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் நேற்று மாலை சாலை விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்ற அவர் பைக்கை வீலிங் செய்ய முயன்றபோது நிலை தடுமாறி விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த வாசன் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் அவரது கை எலும்பு முறிந்துள்ளது. அது தவிர உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!