குழந்தைகள் உடல் விளையாட்டுகள் மற்றும் வெளிப்புற செயல்பாடுகளில் ஆர்வம் இல்லாததால் வீடியோ கேம்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள்.
அவர்கள் இந்த கவனச் சிதறல்களிலிருந்து விலகி இருக்க, அவர்கள் உடல் செயல்பாடுகளிலும் சில ஆக்கப்பூர்வமான வேலைகளிலும் ஈடுபட தூண்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி,
இன்று திருச்சி ஜெகன் மாதா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பில் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இந்த மாரத்தான் போட்டியை பள்ளியின் முதல்வர் அருளானந்து கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் தொடங்கிய மாரத்தான்
ஓட்டம் ஈவேரா கல்லூரி, காஜாமலை, மன்னார்புரம் வழியாக பள்ளியினை அடைந்தது.
இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்றனர்.
இந்த மாரத்தான் போட்டியில் முதலில் வந்த மூன்று நபர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.