தந்தை பெரியாரின் 145 வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது இதனை கடைபிடிக்கும்
விதமாக சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி,மாமன்ற உறுப்பினர்கள் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.